சுடச்சுட

  

  வேலூர் 3 மாவட்டங்களாகப் பிரிப்பு: விஜயகாந்த் வரவேற்பு

  By DIN  |   Published on : 16th August 2019 01:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijayakanth

  வேலூர் மாவட்டம் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
  வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

  வேலூர் மாவட்ட மக்களுடைய நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு எங்களது பாராட்டுகள். 

  அதேபோல நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக பிரித்து, இத்தொகுதி மக்களின் 28 ஆண்டு கால கோரிக்கையை கவனத்தில் கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai