ஏழ்மை-ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்: ஆளுநர் புரோஹித்

சுதந்திர இந்தியாவில் ஏழ்மையும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கப்
தமிழக ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற மாணவிகளின் கலைநிகழ்ச்சியைக் கண்டுகளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , 
தமிழக ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற மாணவிகளின் கலைநிகழ்ச்சியைக் கண்டுகளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , 


சுதந்திர இந்தியாவில் ஏழ்மையும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்கப் பெற வேண்டுமெனவும் அவர் பேசினார். 

நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி, முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்தார். ஆளுநர் மாளிகையில்  வியாழக்கிழமை நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வில் ஆளுநர் புரோஹித் பேசியது:-
சுதந்திரத்துக்கு முன்பாக அஹிம்சை முறையில் போராடிய மக்கள்மீது கூட இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒன்றாகக் கூடி நின்ற சாதாரண சாமானிய மக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தப்படுவது என்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. 
இந்தியர்கள் அனைவரும் தாழ்வானவர்களாக கருதப்பட்டனர். ஆனால், சுதந்திரம் இந்த அனைத்து நிலைகளையும் மாற்றியது.
அதே சமயம், சுதந்திரத்தின் அனைத்துப் பயன்களும் மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். குறிப்பாக, நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைப்பதுடன், கல்வி வாய்ப்புகள் ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். 
சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துகள் அனைத்து மக்களுக்கும் கிடைத்திடுவதை உறுதி செய்ய வேண்டும். சமூகத்தில் நீதியும், உண்மைத்தன்மையும் நிலை நாட்டப்படுவதுடன், ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். நம் நாட்டுக்கு உண்மையாளர்களாக நாம் இருந்திட வேண்டும்.
யாரேனும் ஒருவர் நாட்டுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்றால் அந்தச் செயல்பாடு என்பது நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கு மட்டுமின்றி வருங்காலத் தலைமுறைக்கும் எதிரானதாகும். 
எனவே, நாட்டுப் பற்று நம்முடைய  சிந்தனையில் எப்போதும் இருப்பது முக்கியமாகும். மக்கள் நலனும், மக்களைக் காப்பதும் நம் நெஞ்சங்களில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்.
எளிமையான முறை: நம் நாடு பல்வேறு கலாசார முறைகளைக் கொண்டது. எனவே, திட்டங்களை மக்களுக்காகக் கொண்டு சேர்க்கும் போது அது மிக எளிமையான முறையில் வெளிப்படைத்தன்மையுடன் இருந்திட வேண்டும் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் க.சண்முகம், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக பாஜக  தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com