சர்க்கரை நோய்க்கான உணவு முறைகள்: மருத்துவப் பல்கலை.யில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி

சர்க்கரை நோய்க்கான உணவு சீரமைப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.16)  நடைபெறுகிறது


சர்க்கரை நோய்க்கான உணவு சீரமைப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.16)  நடைபெறுகிறது.
வாழ்க்கை முறை சார்ந்த தொற்றா நோய்கள் குறித்த தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இம்முறை சர்க்கரை நோய்க்கான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்த  கலந்துரையாடல் நிகழ்ச்சி  நடைபெறுகிறது.
அதில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பதிவாளர் டாக்டர் பரமேஸ்வரி, நோய் பரவு இயல் துறை பேராசிரியர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  
அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவர் டாக்டர் பன்னீர் செல்வம் மக்களிடையே அந்நோய் குறித்து விரிவாக உரையாற்ற உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக அவர்களது சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க உள்ளார்.  புற்றுநோய், உடல் பருமன், நினைவாற்றல் குறைபாடு, இதய நோய் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பான கலந்துரையாடல் அமர்வு அடுத்தடுத்து நடைபெற உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவற்றில், துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு மக்களுடன் கலந்துரையாட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com