அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள்: 19% மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் மாற்றம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த பொறியியல் மாணவர்களில் 19 சதவீதம் பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த பொறியியல் மாணவர்களில் 19 சதவீதம் பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்வுத் தாள் மறுமதிப்பீடு முறைகேடு பெரும் சர்ச்சையே ஏற்படுத்தியது. அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வேண்டும் என்றே தோல்வியடைந்ததாக அறிவித்து, அவர்களை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வைத்து பணம் சம்பாதிப்பதாகவும் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்த மாணவர்களை, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வைத்து பணம் பெற்றுக்கொண்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, காரணமானவர்கள் மீது பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்ததோடு, அதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. தேர்வுத்தாள் திருத்துதல், மறுமதிப்பீடு முறை என பல்வேறு நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த நடவடிக்கை களின் காரணமாக, இப்போது பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களில், மதிப்பெண் மாற்றம் பெறுபவர்களின் எண்ணிக்கை இப்போது வெகுவாகக் குறைந்து போனது.
இந்தச் சூழலில், பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஏப்ரல்-மே மாத 2 , 4, 6 பருவ மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது வெளியிட்டுள்ளது. இதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் மாற்றம் கிடைத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் வெங்கடேசன் கூறுகையில், தேர்வுத் தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 19 சதவீதத்தினருக்கு மட்டுமே மதிப்பெண் மாற்றம் கிடைத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com