இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா 

இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.  
இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா 

இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.  

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி  ஆக.17 -ஆம் தேதி வரை தொடர்ந்து 48 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ஜூலை மாதம் முழுவதும் 31 நாள்களுக்கு பெருமாள் சயனக்கோலத்திலும், ஆக. 1 -ஆம் தேதி முதல் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 47 -ஆவது நாளான வெள்ளிக்கிழமை பெருமாள் வெந்தய நிறப் பட்டாடையும், ரோஜா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பெருமாளுக்கென்று பிரத்யேகமாக செய்யப்பட்டிருந்த பாதாம்பருப்பு, முந்திரி மாலையும், கதம்ப மாலைகளும் அணிந்திருந்தார். சகஸ்ர நாம அர்ச்சனை கோயில் பட்டாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. 48 -ஆவது நாளான சனிக்கிழமை காலையில் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நிறைவு பெற்று, மாலையில் அனந்தசரஸ் திருக்குளத்தில் பெருமாளை எழுந்தருள வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. கடந்த 47 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் தரிசனத்தில் சுமார் ஒரு கோடியே 7,500 பேர் தரிசனம் செய்துள்ளனர். 

இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று செய்தியாள்ர்களுக்கு அளித்த பேட்டியில்" இன்று மாலை காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலின் மூலவரை தரிசித்த பின்னர் அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார். குளத்தை சுற்றி 2 மாதங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்துப்பட்டு கண்காணிக்கப்படும். தரிசனத்திற்காக வைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் சாலை சீரமைப்பு போன்றவை 15 நாட்களுக்குள் முடிக்கப்படும். கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.7 கோடி பெறப்பட்டுள்ளது. 

தினசரி சுமார் 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை மறுசுழற்சி செய்யப்படும். அத்திவரதர் தரிசனத்தில் எங்களுடன் பணியாற்றிய அனைத்து துறை ஊழியர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com