குரூப் 4 தேர்வுக்கான இலவச விழிப்புணர்வு முகாம் இன்று முதல் முன்பதிவு: தமிழக அரசு ஏற்பாடு

குரூப் 4 தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் ஊக்கமும், விழிப்புணர்வும் பெறுவதற்காக ஒரு நாள் இலவச பயிற்சி முகாமுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது


குரூப் 4 தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் ஊக்கமும், விழிப்புணர்வும் பெறுவதற்காக ஒரு நாள் இலவச பயிற்சி முகாமுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயர்களை சனிக்கிழமை முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.20) வரை முன்பதிவு செய்ய வேண்டும் என அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் தலைவர் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் அடங்கிய குரூப்-4 தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள், தேர்வு குறித்து விழிப்பும், ஊக்கமும் அடைய ஒரு நாள் பயிற்சி முகாம் வரும் 21-இல் நடைபெறவுள்ளது. இந்த முகாமை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடக்கி வைக்கிறார். குரூப்-4 தேர்வு பற்றி விரிவான விளக்கங்களும், தேர்வை எதிர்கொள்ளும் வழிமுறைகளும், பாட வாரியாக நுணுக்கமான தகவல்களையும் சிறப்பு அழைப்பாளர்கள் அளிக்கவுள்ளனர்.
முன்பதிவு அவசியம்: பயிற்சி முகாமில் பங்கெடுக்க www.annainstitute.org  என்ற இணையதளத்தில் சனிக்கிழமை (ஆக. 17) முதல் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி வரை பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். இது முற்றிலும் இலவச பயிற்சியாகும். முதலில் பதிவு செய்யும் ஆயிரம் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இணையதளத்தில் பெயர்களைப் பதிவு செய்ய இயலாதவர்கள் முகாம் நடைபெறும் இடத்தில் காலை 9 மணி முதல் பதிவு செய்யலாம் என்று அந்த அறிவிப்பில் இறையன்பு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com