திருமாவளவனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு மு.க.ஸ்டாலினி பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்
திருமாவளவனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று தனது 57ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
சமத்துவம் மற்றும் சமூக நீதியின் உறுதிமிக்க குரலாக நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி.க்கு 57-ஆவது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனமகிழ்ச்சி கொள்கிறேன்.

சமுதாயத்தில் அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும், அவர்தம் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அப்பழுக்கற்ற மதச்சார்பின்மைக்காகவும், ஆரோக்கியமான ஜனநாயகம் தொடர்ந்து செழுமை அடைய வேண்டுமென்பதற்காகவும், இளம் வயதிலிருந்தே இடது சாரிச் சிந்தனையுடன் குரல் கொடுத்து வரும் திருமாவளவன் கலைஞர் மீதும், என் மீதும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீதும், லட்சியங்களின் அடிப்படையிலும் தனிப்பட்ட முறையிலும், அளப்பரிய பற்றும் பாசமும் வைத்திருப்பவர்.

பொதுவாழ்வில் தனித்திறன் படைத்த அவர், மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்திடவும், தொடர்ந்து மேலும் பல உயரங்களை அடைந்திடவும், அவர் பல்லாண்டு காலம், உடல் நலத்துடனும் மன வளத்துடனும் நிறைவுடனும், வாழ வேண்டும் என்று எனது இதய பூர்வமான வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com