காஷ்மீர் விவகாரம்: தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் 

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம்: தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் 

சென்னை: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதாக கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“அமைதி திரும்புகிறது” என்று அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து- தொலை தொடர்புகளை துண்டித்து - காஷ்மீரில் “அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை” செயல்படுத்திக் கொண்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீரில் என்ன நடக்கிறது? அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களின் கதி என்ன ஆனது? சகஜ வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இன்னும் ஏன் காஷ்மீர் மாநிலம் ஸ்தம்பித்து நிற்பது ஏன் என்பது பற்றியெல்லாம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களோ, உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களோ கவலைப்படுவதாக தெரியவில்லை.

ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றத் துடித்து- இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பா.ஜ.க. அரசு என்பதைப் பார்க்கும் போது- இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவை கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பதையே எடுத்துரைக்கிறது.

ஆகவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்து தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22.8.2019 அன்று காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில்  ஜனநாயகத்தின் நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com