திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்:  ஆக.29 -இல் தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆக.29-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை ஆவணித் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனை.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை ஆவணித் திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து நடைபெற்ற மகா தீபாராதனை.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆக.29-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுக்கான   திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. 
அதிகாலை 4 மணியளவில் கொடிப்பட்டம் வெள்ளிப் பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக எடுத்துவரப்பட்டு, பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்கள் பாட அதிகாலை 5.20 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, கொடிமரத்துக்கு 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரத்துக்குப் பிறகு காலை 6.30 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. வேதவிற்பன்னர்கள் வேதபாராயணமும், கோயில் ஓதுவார்கள் திருமுறை பாராயணமும் பாடினர். நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, உதவி ஆணையர் செல்வராஜ், இணைஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், கோயில் கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன், மாரிமுத்து, மோகன்ராஜ், திருவிழா பிச்சையா, சிவானந்தம் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், தக்கார் பிரதிநிதி ஆ.சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன், முன்னாள் அறங்காவலர் மு. ராமச்சந்திரன், தேவார சபையினர் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
மாலையில், அருள்மிகு அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவு ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத் தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 
தேரோட்டம்: பத்தாம் திருநாளான ஆக. 29-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடைகின்றன. விழா ஏற்பாடுகளை, கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் சி. குமரதுரை உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com