கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான  வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமானவரித் துறை தொடர்ந்துள்ள வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான  வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு


கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமானவரித் துறை தொடர்ந்துள்ள வழக்கை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015-2016 -ஆம் ஆண்டுக்கான காலக்கட்டத்தில் தாக்கல் செய்த வருமானவரி கணக்கில், முட்டுக்காடு என்ற இடத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலத்தின் மூலம் கிடைத்த ரூ.1.35 கோடி வருவாயைக் கணக்கில் காட்டவில்லை எனக்கூறி கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றத்தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

பின்னர், இந்த வழக்கு விசாரணை எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த வழக்கு, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், வருமான வரித்துறை இந்த வழக்கைத் தொடரும் போது மனுதாரர் மக்களவை உறுப்பினராக இல்லை. மனுதாரர் கடந்த மே மாதம் தான் அவர் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

எனவே மனுதாரர் மீதான வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு. இந்த வழக்கை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். மேலும் அதுவரை இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார். சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com