டெட் இரண்டாம் தாள் முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் தகுதிக்கான இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 


ஆசிரியர் தகுதிக்கான இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டெட் 2-ஆம் தாள் தேர்வு விடைக்குறிப்புகள் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதில் ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க விண்ணப்பதாரர்களுக்கு 5 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆட்சேபணை தெரிவித்த கருத்துகள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் நிபுணத்துவம் படைத்தவர்களிடம் வழங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் இறுதி விடைக்குறிப்புகள் வடிவமைக்கப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
விடைத்தாள் மதிப்பீட்டுக்காக ஸ்கேனிங் செய்தபோது, நிறைய தேர்வர்கள் பூர்த்தி செய்வதில் (சேடிங்) தவறுகள் செய்திருந்தனர். வினாத்தாளின் வரிசை குறியீட்டை விடைத்தாளில் குறிப்பிடாத தேர்வர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. தகுதி நிலையை நிறைவேற்றும் வகையில் தேர்வு முடிவுகள் புதன்கிழமை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்(http://trb.tn.nic.in/) வெளியிடப்பட்டது. தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com