Enable Javscript for better performance
அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

    By DIN  |   Published on : 24th August 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அரக்கோணம்-ரேணிகுண்டா பிரிவில், பூடி-ரேணிகுண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், ஆகஸ்ட் 25,  26 ஆகிய தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சேவையில் மாற்றம் உள்ள ரயில்கள்:  சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்எம்டி-க்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி இயக்கப்படும் ரயில் புத்தூர்-பூடி இடையே நின்று செல்லும் என்பதால், ரேணிகுண்டாவை 100 நிமிடங்கள் தாமதமாக அடையும்.  
    சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இயக்கப்படும் ரயில், அரக்கோணத்தை 30 நிமிடங்கள் தாமதமாக அடையும். 
    சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்டிஎம்க்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி இயக்கப்படும்  ரயில் அரக்கோணத்தை 30 நிமிடங்கள் தாமதமாக அடையும். 
    சென்னை மூர்மார்க்கெட்-அரக்கோணத்துக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதி  இயக்கப்படும்  ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்படும். பின்னர் திருவள்ளூரில் இருந்து பயணிகள் சிறப்பு ரயில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி  இயக்கப்படும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai