Enable Javscript for better performance
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ஆக.29 -இல் ரயில் மறியல் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ஆக.29 -இல் ரயில் மறியல் போராட்டம்

    By DIN  |   Published on : 24th August 2019 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    fisherman

    ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து மீனவ சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம். 


    இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 29 -ஆம் தேதி (வியாழக்கிழமை) ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என ராமேசுவரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவ சங்கங்களின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து மீனவர்கள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  மீனவ சங்கப் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் தலைமை வகித்தார்.
    இந்த கூட்டத்தில் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜ், மீனவ சங்கத்தலைவர்கள் சகாயம், எமரிட் உள்பட 13 மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
    இக்கூட்டத்தில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும். இலங்கையில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அனைத்து விசைப்படகுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். கருவாடுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  சனிக்கிழமை (ஆக.24)  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்றும், வரும் 29 -ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai