டிச. 8-இல் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க செப். 18 கடைசி நாள்

 மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. 


 மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. 
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (சிடெட்) ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. சிடெட் மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல்தாள் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாள் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். அதன்படி சிடெட் தேர்வானது டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 18-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 
சிபிஎஸ்இயின் http://ctet.nic.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம். விண்ணப்பக் கட்டணமாக ஓபிசி பிரிவுக்கு ஒருதாள் மட்டும் எழுத ரூ.700, இருதாள்களை எழுதுபவர்களுக்கு ரூ.1,200 செலுத்த வேண்டும். இதேபோன்று எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.350-ம், 2 தாள்களையும் எழுத ரூ.600-ம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 
இதற்கிடையே சிடெட் தேர்வு 20 மொழிகளில் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 7 ஆண்டுகளுக்கு நாடு முழுவதுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர முடியும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட சிடெட் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com