புதுவை சட்டப்பேரவை ஆக.26-இல் கூடுகிறது

புதுவை சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்தார்.
புதுவை சட்டப்பேரவை ஆக.26-இல் கூடுகிறது


புதுவை சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது என பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் தெரிவித்தார்.
நிகழாண்டு, மக்களவைத் தேர்தல் காரணமாக, 5 மாதங்களுக்கு (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) அரசின் செலவினங்களுக்குத் தேவையான இடைக்கால பட்ஜெட்டை கடந்த மார்ச் 2-ஆம் தேதி, சட்டப்பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 3-ஆம் தேதி சட்டப்பேரவை கூடியது. 
 இந்தக் கூட்டத்தில், பேரவையின் புதிய தலைவராக சிவக்கொழுந்து பதவியேற்றார். தொடர்ந்து, புதுவை மாநில திட்டக் குழுத் தலைவரும், ஆளுநருமான கிரண் பேடி தலைமையில் பட்ஜெட்டுக்கான தொகையை இறுதி செய்ய திட்டக் குழுக் கூட்டம் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் பட்ஜெட் தொகை ரூ. 8,425 கோடியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் 22,  23 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. 
 இந்த நிலையில், புதுவை அரசு அனுப்பி வைத்த பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே,  வருகிற 26-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவையைக் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால், அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அரசின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்குவதில் சட்ட ரீதியான சிக்கல் ஏற்படும். இந்தக் கூட்டத் தொடர் வருகிற ஆக.26-ஆம் தேதி தொடங்கி, இம்மாத இறுதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தொடக்கி வைத்து உரையாற்றுகிறார். பேரவைக் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து வருகிற 26-ஆம் தேதி பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி இதுவரை இறுதி செய்யப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com