மதியம் பெய்த தூறல் டிரெய்லர்தான்: மாலை அல்லது இரவில் இருக்கிறது மழை விருந்து!

இன்று பிற்பகலில் சென்னையில் பரவலாக ஒரு சில நிமிடங்கள் தூறல் போட்டுச் சென்றது. அதுவெறும் டிரெய்லர்தான், இன்று மாலை அல்லது இரவில் மழை விருந்து காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
மதியம் பெய்த தூறல் டிரெய்லர்தான்: மாலை அல்லது இரவில் இருக்கிறது மழை விருந்து!


இன்று பிற்பகலில் சென்னையில் பரவலாக ஒரு சில நிமிடங்கள் தூறல் போட்டுச் சென்றது. அதுவெறும் டிரெய்லர்தான், இன்று மாலை அல்லது இரவில் மழை விருந்து காத்திருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் மிகச் சிறந்த நாளாக இது அமைந்துள்ளது. தற்போது லேசான தூறல் போட்டுச் சென்றது. ஆனால் இன்று மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 3 நாட்களாக சென்னையின் வடக்கு அல்லது தெற்கு பகுதிகளில் மழை பெய்திருக்கலாம். ஆனால் இன்று சென்னையில் பரவலாக மழை பெய்யும் நாளாக அமைந்துள்ளது. இயற்கையே இன்று சென்னையே சமமாக பாவித்து மழையைப் பொழியும். இன்று காலையிலேயே மழையைக் கொடுக்கும் மீன் போன்ற மேகக் கூட்டங்கள் காணப்பட்டன. அதுவே மழைக்கான அறிகுறியாக அமைந்துவிட்டது.

இனி வரும் நாட்களிலும் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தினமும் மழைக்கான வாய்ப்பு காணப்படுகிறது. ஆனால் அது பரவலான மழையாக அமைய வேண்டும் என்றால் அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். 

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த  24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவானது..

காட்டாங்குளத்தூர் - 55 மி.மீ.
திருத்தணி - 42 மி.மீ.
சத்யபாமா பல்கலை - 26 மி.மீ.
கேளம்பாக்கம் - 17 மி.மீ.
உத்திரமேரூர் - 17 மி.மீ.
திருவள்ளூர் - 5 மி.மீ.
பெரம்பூர் - மி.மீ. என்று பதிவிட்டுள்ளார்.

எனவே, இன்று மாலை அல்லது இரவில் வெளியே கிளம்புவதாக இருந்தால் கையில் குடையுடன் செல்வது நல்லது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com