Enable Javscript for better performance
8 ஆண்டுகளில் 440 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    8 ஆண்டுகளில் 440 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

    By DIN  |   Published On : 25th August 2019 12:55 AM  |   Last Updated : 25th August 2019 12:55 AM  |  அ+அ அ-  |  

    வழக்குகளை விரைந்து முடிக்கும் பொருட்டு, தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 440 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
     தமிழகத்தின் 13-ஆவது புதிய அரசு சட்டக் கல்லூரி, நாமக்கல்லில் சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற, சட்டம் மற்றும் சிறைச்சாலைகள், கனிம வளத் துறை அமைச்சர் சி.வி,சண்முகம் தலைமை வகித்து பேசியது:
     அரசுக் கட்டடங்கள் அனைத்தும் சொந்தக் கட்டடங்களாக இருக்க வேண்டும் என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம். நீதித் துறை சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதில் அவர் முனைப்புடன் இருந்தார். நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர்களுக்கும் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தால்தான் அவர்களால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியும் என்பார்.
     அது மட்டுமின்றி, ஏழை மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எங்கெல்லாம் வழக்குகள் தேங்கியுள்ளனவோ, எங்கெல்லாம் வழக்குகள் அதிகம் பதிவாகின்றனவோ, அங்கெல்லாம் புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மகளிர், குடும்ப நலம், பாலியல், வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக ஆங்காங்கே தனித்தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
     2011-2016-ஆம் ஆண்டு வரை, 5 ஆண்டுகளில் அவர் இருந்தபோது 223 நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போதைய முதல்வர் 3 ஆண்டுகளில் மட்டும் 217 நீதிமன்றங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் 8 ஆண்டுகளில் 440 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.
     தற்போது மொத்தமாக 1146 நீதிமன்றங்கள் உள்ளன.
     சட்டத் துறைக்கு, 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.711 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போதைய முதல்வர் 3 ஆண்டுகளில் ரூ.1,111 கோடியை ஒதுக்கியுள்ளார்.
     திறமையான வழக்குரைஞர்களை உருவாக்கும் பொருட்டு, இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ப, அரசு சட்டக் கல்லூரிகளில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
     விழுப்புரத்தில் பிரம்மாண்டமாக சட்டக் கல்லூரி கட்டடம் உருவாகி வருகிறது. நாமக்கல்லில் அதை விட பிரம்மாண்ட கட்டடம் ரூ.80 கோடியில் உருவாகவுள்ளது. நாமக்கல்லில் நிகழாண்டிலேயே அனைத்து வசதிகளுடன், குளிர்சானத்துடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்படும்.
     தனியார் சட்டக் கல்லூரிகளில் ரூ.4 லட்சம் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், அரசு சட்டக் கல்லூரிகளில், முதலில் ரூ. 2,310 செலுத்தினால் போதும். அதன்பின், ஆண்டுக்கு ரூ.500 மட்டுமே கட்டணம். 5 ஆண்டுகளுக்கும் ரூ.6,310 மட்டுமே செலுத்த வேண்டும்.
     வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள, சட்டக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வந்த செலவினத் தொகை ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
     
     
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp