மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு செல்ல மீண்டும் அனுமதி

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக  மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பார்வையாளர் அனுமதி வாயில் மூடப்பட்டிருந்த நிலையில்,
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு செல்லும்  சுற்றுலாப் பயணிகள்.
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு செல்லும்  சுற்றுலாப் பயணிகள்.


தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் எதிரொலியாக  மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பார்வையாளர் அனுமதி வாயில் மூடப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீவிர சோதனைக்குப் பிறகு பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 
  தீவிரவாதிகள் ஊடுருவல் தகவல் வந்ததை அடுத்து, தமிழகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
இதையடுத்து, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின்கட்டுப்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம் பகுதிக்கு, அத்துறையினர் கூடுதல் பாதுகாப்புக்கு உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 மேலும், கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி திங்கள்கிழமை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கலங்கரை விளக்கம் நுழைவு வாயில் மற்றும் அருகிலுள்ள கடல்சார் அருங்காட்சியகமும் தற்காலிகமாக மூடப்பட்டது. 
இதனால், திங்கள்கிழமை கலங்கரை விளக்கத்தை சுற்றிப்பார்க்க வந்த பயணிகள், நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த அறவிப்புப் பலகையை படித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கலங்கரை விளக்கம் மற்றும் கடல்சார் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு படையினரின் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டனர். 
 இதுகுறித்து கலங்கரை விளக்க பாதுகாப்பு அலுவலர் வசந்த் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தீவிரவாதிகள் ஊடுருவல் காரணமாக  பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கலங்கரை விளக்கம் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிக்கை வந்தது. 
இதையடுத்து திங்கள்கிழமை அதற்கான அறிவிப்பு பலகையை வைத்தோம்.  இதையடுத்து, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் காவல் துறை பாதுகாப்புடன் பரிசோதனை செய்து, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கலாம் எனக் கூறியதையடுத்து, கலங்கரை விளக்கத்தின் மேல் செல்ல அனுமதித்து வருவதாகத் தெரிவித்தார்.

போலீஸார் பாதுகாப்புடன் மாமல்லபுரம் கலங்கரை  விளக்கத்துக்கு அனுமதிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com