மேட்டூர் அணையில் இருந்து 3 மாவட்டங்களின் பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு: முதல்வர்

மேட்டூர் அணையில் இருந்து திருச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பாசனத்துக்கு புதன்கிழமை முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
மேட்டூர் அணையில் இருந்து 3 மாவட்டங்களின் பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு: முதல்வர்


மேட்டூர் அணையில் இருந்து திருச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களின் பாசனத்துக்கு புதன்கிழமை முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
இதே போன்று பெரியார், வைகை அணைகளில் இருந்தும் வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடும்படி திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தக் கோரிக்கையை ஏற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 28) முதல் 137 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
பெரியார் அணை: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) முதல் 120 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.
வைகை அணை: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழுள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையேற்று, வரும் வியாழக்கிழமை முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். 
விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com