குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: நடிகை த்ரிஷா

குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: நடிகை த்ரிஷா


குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்தார்.
யுனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ண தூதுவராக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருகிறார். யுனிசெப் நிறுவனத்தின் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் நடிகை த்ரிஷா பங்கேற்று மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
குற்றங்கள் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல்கள் தெரிந்த நபர்களால் செய்யப்படுகிறது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95% பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் . இது நமது குழந்தைகளின் பாதுகாப்பற்றச் சூழலை எடுத்துக் காட்டுகிறது.
சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் இவர்களுக்கிடையிலான ஆணாதிக்கத் தன்மையை நிலை நிறுத்தும் செயல்பாடுகள்  அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். 
பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது.  திரைப்படங்களை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவை கற்பனை மட்டுமே. அதை பின்பற்றக் கூடாது என்றார் த்ரிஷா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com