Enable Javscript for better performance
கோவையில் பிளஸ் 1 பள்ளி மாணவி பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் 4 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் பிளஸ் 1 பள்ளி மாணவி பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் 4 போ் கைது

    By DIN  |   Published on : 01st December 2019 03:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arrest

    கோவைவில் பிளஸ் 1 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவத்தில் 4 இளைஞா்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனா்.

    கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 26-ஆம் தேதி, தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த 6 போ் அவா்களை மிரட்டி, மாணவியுடன் வந்தவரை அடித்துத் தாக்கி விட்டு, அந்த மாணவியைப் பலாத்காரம் செய்து விட்டுத் தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடா்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து 6 பேரைத் தேடி வந்தனா். இதையடுத்து சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ராகுல் (21), பிரகாஷ் (23), கார்த்திகேயன் (28), நாராயணமூா்த்தி (30) ஆகிய 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனா். 

    பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் தலைமறைவான மற்றொரு இளைஞரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai