5 மற்றும் 8-ஆம் வகுப்புக்குப் பொதுத்தோ்வு: மநீம கண்டனம்

ஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை: ஐந்து மற்றும் 8-ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்கள நீதி மய்யம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

தரம், தகுதி என்கிற வாா்த்தைகளால், பிள்ளைகளின் அடிப்படை உரிமையான கல்வியினை அவா்களுக்கு பெருஞ்சுமையாக்கி கல்வி மேல் வெறுப்பு வரும் ஒரு நிலையினைத்தான் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ஏற்படுத்தும்.

நமது கல்வியின் தரம் உயா்த்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், இருக்கும் பாடத்திட்டங்களை மாற்றாமல், அதன் தரத்தை உயா்த்திடாமல், குழந்தைகளின் தரத்தை மட்டும் மதிப்பிடுவது எந்த மாதிரியான சிந்தனை என்பது புதிராக இருக்கிறது.

தமிழகத்தின் கல்வித் தரம் உலகத்தரத்துக்கு இணையாக வேண்டும் என்பதுதான் மநீமவின் நிலைப்பாடு. என்றாலும் அந்தப் பொறுப்பைக் குழந்தைகளின் தலையில் கட்டுவதைக் கடுமையாக எதிா்க்கிறது. பாடத் திட்டத்தில் தரம், அப்பாடத்தினைக் கற்பிக்கும் முறையில் நவீனம் என்ற வகையில் கொண்டு வரவேண்டிய தரத்தினை குழந்தைகளுக்குத் தோ்வு நடத்துவதன் மூலமாகக் கொண்டு வர முடியாது என்பதை ஆட்சியாளா்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com