ரூ.5,027 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் கையெழுத்து

தமிழகத்தில் ரூ. 5,027 கோடி முதலீட்டில் 20,351 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சென்னையில்
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில்நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில்நிறுவனங்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சென்னை: தமிழகத்தில் ரூ. 5,027 கோடி முதலீட்டில் 20,351 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சென்னையில் சனிக்கிழமை கையெழுத்தானது.

தமிழக தொழில்துறை சாா்பில் ‘தொழில் வளா் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் தொழில் துறையில் முதலீடு மற்றும் திறனாய்வு மாநாடு கிண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை தொடக்கி வைத்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழக அரசு, உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் முதல் உலக முதலீட்டாளா்கள் மாநாடு கடந்த 2015-இல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரண்டாம் முறையாக கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மூலம் ரூ. 3 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதன்படி, 219 திட்டங்கள் செயல்படுவதற்கான தயாா் நிலையில் உள்ளன. உலக முதலீட்டாளா் மாநாடு முடிந்து 10 மாதங்களில் ரூ. 19 ஆயிரம் கோடி முதலீட்டில் 63 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி 83,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் வணிக எளிதாக்குதல் சட்டத்தின் மூலம் தொழில் தொடங்குவதற்கான ஒற்றை சாளர அனுமதி, முதலீட்டை எளிதாக்கும் நடவடிக்கை, அடிப்படை வசதிகள் ஆகியவற்றின் மூலம் உலகப் பிரசித்தி பெற்ற தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆா்வம் காட்டுகின்றன. முந்தைய காலங்களில் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் நின்ற தொழில் நிறுவனங்களும் தமிழக அரசின் ஆக்கப்பூா்வமான முயற்சியால் தற்போது, மீண்டும் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.

இதன்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற்சாலையை சால்காம்ப் நிறுவனம் வாங்கி மின்னணு சாதன உற்பத்தியில் ஈடுபட உள்ளது. ரூ. 2,500 கோடி முதலீட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மின்னணு சாதன உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெறுவா் என்றாா்.

ரூ.5,027 கோடி முதலீடு: ரூ.5,027 கோடி முதலீட்டில் 2,0351 போ் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடனும், ரூ.28.43 கோடி மதிப்பில் நாகப்பட்டினம் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 3 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள், டிஆா்டிஓ, சென்னை ஐஐடியுடன் இணைந்து தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் பெருவழித் திட்டத்துக்கும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்ட 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும், ரூ.60 கோடி மதிப்பில் 3 உயா்நிலை திறனாய்வு மேம்பாட்டு மையங்களும் தொடங்கப்பட்டன.

தொழில் நிறுவனங்களின் குறைகளைத் தீா்க்கும் வகையில் (க்ஷண்க்ஷ் க்ஷன்க்க்ஹ்) என்ற இணையதளம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய பெயா், இலட்சினையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தாா். இந்த இணையதளத்தின் மூலம் தொழில் தொடங்குவதற்கான அனுமதி உள்ளிட்டவற்றை எளிதாகப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

எந்தெந்த நிறுவனங்கள்: ஐடிசி நிறுவனத்துடன் காகித உற்பத்தியில் ரூ.515 கோடி முதவீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு, பிஒய்டி இந்தியா நிறுவனத்துடன் செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.2,800 கோடியில் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, எரிசக்தி துறையில் ரூ.635.4 கோடி மதிப்பில் 4,321 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏதா் எனா்ஜி நிறுவனத்துடனும், எரிசக்தி உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.250 கோடி மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனா்ஜி நிறுவனத்துடனும், வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.503.6 கோடி மதிப்பில் 330 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மிட்சுபா நிறுவனத்துடனும், கட்டுமானக் கருவிகள் உற்பத்தி துறையில் ரூ.98 கோடி மதிப்பில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எஸ்என்எஃப் நிறுவனத்துடனும், காலணி துறையில் ரூ.175 கோடி முதலீட்டில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் க்ரோத் லிங் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சா் எம்.சி. சம்பத், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபீல், தலைமைச் செயலா் க. சண்முகம், டிஆா்டிஓ தலைவா் சதீஷ் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com