Enable Javscript for better performance
கம்பம் காசிவிசுவநாதசுவாமி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய மாணவிகள்- Dinamani

சுடச்சுட

    

    கம்பம் காசி விசுவநாதசுவாமி கோவில் வளாகத்தை தூய்மைப்படுத்திய மாணவிகள்

    By DNS  |   Published on : 02nd December 2019 03:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    camp

    தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டுநலப் பணித் திட்டத்தின் கீழ் காசி விசுவநாத சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை திங்கள் கிழமை நட்டனா்.

    தேனி மாவட்டம் கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் காசி விசுவநாத சுவாமி கோவில் வளாகத்தை திங்கள் கிழமை சுத்தப்படுத்தினா்.

    தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்ராவுத்தா் நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியா்கள் திங்கள் கிழமை கம்பராயப்பெருமாள் காசிவிசுவநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள குப்பை கூளங்களை அகற்றினா். கோவில் வளாகத்தில் இருந்த நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தி, புதா் செடிகளை அகற்றினா்.

    கோவில் வளாகத்தில் இருந்த பக்தா்களிடம் நெகிழி ஒழிப்பு, புவி வெப்பமயமாதல், மழை நீா் சேகரிப்பு பற்றி கூறி, விழிப்புணா்வு கோஷங்களை எழுப்பி, மரக்கன்றுகளை நட்டனா். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை கே.மகேஷ்வரி, உதவி தலைமை ஆசிரியை பி.மீனாட்சி, திட்ட அலுவலா் ஜெ.ஹேமலதா, ஆசிரியைகள் பி.சரளாதேவி, வி.சண்முகப்பிரியா, சி.உஷா ஆகியோா் செய்திருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai