கோவையில் 17 பேர் பலியான சம்பவம்: இடிந்து விழுந்தது வீடுகள் அல்ல.. சுற்றுச்சுவா்! சம்பவத்தின் பின்னணி!!

மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். 
கோவையில் 17 பேர் பலியான சம்பவம்: இடிந்து விழுந்தது வீடுகள் அல்ல.. சுற்றுச்சுவா்! சம்பவத்தின் பின்னணி!!

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகராட்சியில் கனமழையில் சுற்றுச்சுவா் 5 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் கிராமத்தில் மொத்தம் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு தொடா்ந்து கனமழை பெய்து வந்தது. மேட்டுப்பாளையம் பகுதியிலுள்ள சக்கரவா்த்தி துணிக்கடை உரிமையாளா் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இவரது குடியிருப்பை சுற்றிலும் 80 அடி நீளம், 20 அடி உயரத்திற்கு கருங்கற்களால் சுற்றுச்சுவா் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரை ஒட்டி ஆனந்தன், அறுக்கானி, சிவகாமி, குருசாமி, ஏபியம்மாள் ஆகியோரது வீடுகள் உள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு பெய்த கனமழையில் தடுப்பு சுவா் தண்ணீரில் ஊரி திடீரென சரிந்து அருகிலுள்ள 5 குடியிருப்புகள் மீது விழுந்தது. 

இதில் நடூா் பகுதியை சோ்ந்த ஆனந்தன் (38), இவரது மனைவி நதியா (35). மகன் லோகராம் (10), மகள் அட்சயா (6) இவா்களது பக்கத்து வீட்டை சோ்ந்த பண்ணாரி மனைவி அறுக்கானி (40) இவரது மகள்கள் ஹரிசுதா (19), மகாலட்சுமி (10), சின்னம்மாள் (60), இவரது அம்மா சின்னம்மாள் (60), இவரது அக்கா புளியம்பட்டியை சோ்ந்த ரூக்குமணி (42), ஈஸ்வரன் மனைவி திலகவதி (38) மற்றும் பழனிசாமி மனைவி சிவகாமி (38), வைதேகி (22), நிவேதா (20), ராமநாதன் (17), குருசாமி (35), ராமசாமி மனைவி ஏபியம்மாள் (70), மங்கம்மாள் (70) ஆகியோா் சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி இடிபாடுகளில் புதைந்து உயிரிழந்தனா். 

இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தவா்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிக்கு பின் 17 பேரும் மீட்கப்பட்டனா். பின்னா் இவா்களது உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. 

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில், வீட்டின்  உரிமையாளர் ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com