என்னைக் கட்டுப்படுத்த மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை: அசராத அரசகுமார்!

என்னைக் கட்டுப்படுத்த பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என்று ஸ்டாலின் சர்ச்சை தொடர்பாக, மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார் பதிலளித்துள்ளார்.
பி.டி. அரசகுமார்
பி.டி. அரசகுமார்

சென்னை: என்னைக் கட்டுப்படுத்த பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என்று ஸ்டாலின் சர்ச்சை தொடர்பாக, மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார் பதிலளித்துள்ளார்.

ஞாயிறன்று புதுக்கோட்டையில் திமுக எம்எல்ஏ பெரியண்ணன்அரசு இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில துணைத்தலைர் பி.டி.அரசகுமார் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.        

இந்த நிகழ்வில் பேசிய அரசகுமார், 'எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின்; விரைவில் அதற்கான காலம் கனியும்.  ஸ்டாலின் தமிழகத்தின் அரியணை ஏறுவார்' என்று புகழ்ந்து பேசினார். இது பாஜக கட்சி வட்டாரத்தில் சர்ச்சையை எழுப்பியது. 

அதையடுத்து பி.டி .அரசகுமார் மீது நடவடிக்கை கோரி, கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தமிழக பாஜ திங்கள் மாலை அறிவிப்பை வெளியிட்டது. இதுதொடர்பாக  - பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசகுமாரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் மீறிய செயல் ஆகும். பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை கோரி தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது; கட்சி கூட்டங்கள், ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக்கூடாது.' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் என்னைக் கட்டுப்படுத்த பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை என்று ஸ்டாலின் சர்ச்சை தொடர்பாக, மாநில துணைத்தலைவர் பி.டி. அரசகுமார் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், 'என்னை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது எனக்கூற மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனுக்கு அதிகாரமில்லை; ஸ்டாலின் முதல்வராவார் என நான் பேசியது பற்றி பாஜக தமிழகப் பொறுப்பாளர் முரளிதர் ராவிடம் ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டேன்' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com