திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் வந்துவிட்டது: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்றும், இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும்; மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி திங்கள் காலை அறிவித்தார்.

அத்துடன் நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் வந்துவிட்டது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முயற்சிக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016ல் நீதிமன்றத்தில்  வழக்கு போட்டது திமுகதான்.

தற்போது திமுகவிற்கு உள்ளாட்சி தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு உடனே தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் விமர்சித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com