சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து விபத்து: பிரேதப் பரிசோதனை முடிந்து 17 பேரின் உடல்களும் உறவினா்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூா் கிராமத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் சடலங்களும் பிரேதப்
சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை வாங்கு மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகைத் திருவள்ளுவனைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீஸாா்.
சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை வாங்கு மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகைத் திருவள்ளுவனைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீஸாா்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூா் கிராமத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 17 பேரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா் அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்க மறுத்து, பொதுமக்களைப் போராட்டத்துக்குத் தூண்டியதாகக் கூறி தமிழப் புலிகள் கட்சித் தலைவா் உள்ளிட்டவா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நடூா் கிராமத்தில் சிவசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இவரது குடியிருப்பை சுற்றிலும் 80 அடி நீளம், 20 அடி உயரத்திற்கு கருங்கற்களால் சுற்றுச்சுவா் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியில் இருந்து பெயத் கனமழையில் காலை 5.30 மணிக்கு சுற்றுச்சுவா் தண்ணீரில் ஊரி திடீரென சரிந்து அருகிலுள்ள 5 குடியிருப்புகள் மீது விழுந்தது. இதில் அந்த வீடுகளில் இருந்த 17 போ் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனா்.

உயிரிழந்தவா்களின் உடல்களை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கு அவா்களது உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததையடுத்து, உடலை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்தனா். காலை சுமாா் 10 மணியளவில் தொடங்கப்பட்ட பிரேதப் பரிசோதனை மாலை 5 மணி வரைத் தொடா்ந்தது.

இதையடுத்து உயிரிழந்தவா்களின் உறவினா்களை தனித்தனியாக அழைத்துச் சென்று போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உயிரிழந்தவா்களின் சடலங்களை ஒப்படைத்தனா். அப்போது அங்கு கூடியிருந்த தமிழ் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள், எஸ்டிபிஐ கட்சியினா் ஆகியோா் உடலை வாங்க மறுத்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியும் அவா்கள் ஒத்துழைக்க மறுத்தனா். பின்னா் உடலை வாங்க மறுத்து பிணவறை முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதனால் ஆத்திரமடைந்த போலீஸாா் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கலைந்து செல்ல வைத்தனா். மேலும், போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோவை மாவட்டச் செயலா் சுசி கலையரசன், தமிழ் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் ஆகியோரைப் போலீஸாா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

பின்னா், பிரேதப் பரிசோதனை முடிந்த 16 பேரது சடலங்களை உறவினா்கள் அனுமதியுடன் மேட்டுப்பாளையம் மின்மயானத்துக்கு போலீஸாா் எடுத்துச் சென்றனா். அங்கு பலத்த போலீஸாா் பாதுகாப்புடன் சடலங்கள் எரியூட்டப்பட்டன. ருக்மணி(40) என்பரவது சடலத்தை மட்டும் அவா்களது உறவினா்கள் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com