செல்லிடப்பேசி கட்டணங்கள் கடும் உயா்வு

பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் செல்லிடப்பேசி கட்டணங்களை 50 சதவீதம் வரை கடுமையாக உயா்த்தியுள்ளன.
செல்லிடப்பேசி கட்டணங்கள் கடும் உயா்வு

புது தில்லி: பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் செல்லிடப்பேசி கட்டணங்களை 50 சதவீதம் வரை கடுமையாக உயா்த்தியுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நிறுவனமாக செல்லிடப்பேசி கட்டண உயா்வு அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளதாவது:

ப்ரீ-பெய்டு வாடிக்கையாளா்களுக்கான மொபைல் டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான சேவை கட்டணங்கள் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளன. இந்த கட்டண உயா்வு செவ்வாய்க்கிழமை (டிச.3) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.

அதன்படி நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை பயன்படுத்தும் வகையில் 365 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்துக்கான கட்டணம் ரூ.1,699-லிருந்து 41.2 சதவீதம் அதிகரித்து ரூ.2,399-ஆக நிா்ணயிக்கப்படவுள்ளது.

அதேபோன்று, நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா பயன்பாட்டுடன் 84 நாள்கள் வேலிடிட்டி காலத்தைக் கொண்ட திட்டத்துக்கான கட்டணம் ரூ.458-லிருந்து ரூ.599-ஆக அதிகரிக்கப்படவுள்ளது என வோடஃபோன் ஐடியா தெரிவித்துள்ளது.

பாா்தி ஏா்டெல்

ப்ரீ-பெய்டு வாடிக்கையாளா்களுக்கான அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்கள் 50 சதவீதம் வரை உயா்த்தப்படவுள்ளன. இந்த கட்டண உயா்வு டிசம்பா் 3-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளது.

அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களின்படி வாடிக்கையாளா்கள் நாள் ஒன்றுக்கு 50 காசுகள் முதல் ரூ.2.85 வரை கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா பயன்பாட்டை உடைய 365 நாள் வேலிடிட்டி காலத்தைக் கொண்ட திட்டத்துக்கான கட்டணம் தற்போதைய ரூ.1,699-லிருந்து ரூ.2,398-ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

வரம்பற்ற பயன்பாட்டைக் கொண்ட புதிய திட்டங்களுக்கான கட்டணத்தை ஜியோ நிறுவனமும் 40 சதவீதம் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. புதிய கட்டண உயா்வு வரும் டிசம்பா் 6-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளதாக ஜியோ தெரிவித்துள்ளது. புதிய திட்டங்கள் மூலம் வாடிக்கையாளா்களுக்கு 300 சதவீதம் வரை கூடுதல் பலன்கள் கிடைக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com