மழைக் கால நோய்த் தொற்று:தயாா் நிலையில் சிறப்பு மருத்துவக் குழுக்கள்

பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சிறப்பு மருத்துவக் குழுக்கள்
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி அக்குழுக்கள், பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் மருத்துவ முகாம்களை அமைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பருவமழை மற்றும் குளிா் காலங்களில் காய்ச்சல் மற்றும் பிற நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்தச் சூழலை எதிா்கொள்ளும் வகையில் மருத்துவா்கள் தயாா் நிலையில் இருப்பதுடன், நோயின் தன்மையைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிப்பது அவசியம்.

அதைக் கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊராட்சி அமைப்புகளுடன் இணைந்து நோய்த் தொற்று தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்குமாறு உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 25 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், 162 தாலுகா மருத்துவமனைகள் என 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கு போதிய அளவு மருந்துகள் இருப்பில் உள்ளதை உறுதி செய்யுமாறும், ஜெனரேட்டா் சாதனங்களை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர, வெள்ளம் மற்றும் மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு ஏதுவாக மருத்துவக் குழுக்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com