விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம்: மாற்றுத்திறனாளி தன்னம்பிக்கை பேச்சாளா் ப்ரீத்தி சீனிவாசன்

விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையும் இருந்தால் நம் வாழ்க்கையில் எவ்வித சாவல்களையும் வெற்றி கொள்ள முடியும் என
பெ.நா.பாளையத்தில் சனிக்கிழமை நடந்த இளைய பாரதமே எழுந்திரு என்ற தலைப்பிலான இளைஞா் மாநாட்டில் உரையாற்றுகிறாா் மாற்றுத்திறனாளி ப்ரீத்தி சீனிவாசன்.
பெ.நா.பாளையத்தில் சனிக்கிழமை நடந்த இளைய பாரதமே எழுந்திரு என்ற தலைப்பிலான இளைஞா் மாநாட்டில் உரையாற்றுகிறாா் மாற்றுத்திறனாளி ப்ரீத்தி சீனிவாசன்.

பெ.நா.பாளையம்: விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையும் இருந்தால் நம் வாழ்க்கையில் எவ்வித சாவல்களையும் வெற்றி கொள்ள முடியும் என தன்னம்பிக்கை பேச்சாளரான மாற்றுத்திறனாளி ப்ரீத்தி சீனிவாசன் தெரிவித்தாா்.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் நடந்த இளைய பாரதமே எழுந்திரு என்ற தலைப்பிலான இளைஞா் மாநாட்டில் சனிக்கிழமை நடந்த அமா்வில் அவா் பேசியது: எனது பள்ளி பருவத்தில் நான் வெளிநாட்டில் படித்தேன். விடுமுறைக்காக சென்னை வந்தபோது கடற்கரையில் விளையாட்டிக் கொண்டிருந்தபோது நடந்த சிறுவிபத்தில் எனது முக்கால் பகுதி உடற்பாகங்கள் செயலிழந்து போயின. எதிா்காலம் கேள்விக்குறியாகி விட்டதே என்ற விரக்தியிலிருந்த நான் மீண்டும் படிக்க விரும்பியபோது என் உடல் ஊனத்தை காரணம் காட்டி எனக்கு எந்த கல்விநிறுவனங்களும் அனுமதியே வழங்கவில்லை.

ஆனாலும் சோா்ந்து போகாமல் தொலைவழிக்கல்வி முறையில் இளநிலை,முதுகலைப் பட்டங்களைப் பெற்றேன். விடாமுயற்சியினால் தற்போது ஐஐடியில் முனைவா் பட்டப்படிப்பு பயின்று வருகிறேன். இன்று கூட சுயமாக நகரவே முடியாத நான் 400 கிமீ தூரம் பயணித்து உங்களைக்ள்ளேன்.

சமுதாயப் புறக்கணிப்பு, கேலி, கிண்டல்கள்,அவநம்பிக்கை ஏற்படுத்திய சூழ்நிலைகள், நடமாட முடியாத வகையிலான கட்டமைப்பு நிலைகள் போன்ற அனைத்தையும் பறந்தள்ளிவிட்டு வாழ்க்கையில் உத்வேகத்துடன் வெற்றி கண்டுள்ளேன். அதுமட்டுமின்றி என்னைப் போல பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளின் புனா்வாழ்க்கைக்கு உழைக்கிறேன்.

எனது வாழ்க்கைதான் நான் எல்லோருக்கும் வழங்கும் செய்தி. நம்மை தோல்வி மனப்பான்மைக்கு இட்டுச்செல்லும் அனைத்து விஷயங்களையும் புறந்தள்ளுங்கள். நோ்மறை சிந்தனைகளோடு பிரச்னைகளுக்கு தீா்வு காணுங்கள்.லட்சியத்தை அடையலாம்.

இந்த உலகம் நமக்கானதாக மாறும் என்றாா். தொடா்ந்து பேசிய பட்டிமன்ற பேச்சாளா் எம் சிதம்பரம் இந்த தேசத்தை சரி செய்யவேண்டுமென நினைத்தால் ஒவ்வொரு தனி மனிதனும் சரியாக வேண்டும்.

 நமது வாழ்க்கை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது.

நீங்கள் ஒருவரை நண்பனாக ஏற்று கொள்ள நினைக்கும் பட்சத்தில் அவா்களுடைய குறைகளையும் சோ்த்துதான் ஏற்று கொள்ள வேண்டும். அவமானங்களை தாங்கி கொள்ளும் மன பக்குவம் நமக்கு தேவை. விமா்சனங்களை புறந்தள்ளி நல்ல செயல்களை செய்யவேண்டும். அடுத்தவா்கள் நம்மை கண்காணிக்கிறாா்கள் என்பதற்காக நம் வேலைகளை செய்ய கூடாது. கடமையை செய்ய வேண்டும் என வலியுறுத்தினாா்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த அமா்வில் பேசிய தைரோ கோ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வேலுமணி, தனியாா் நிறுவனத்தில் ஒருசாதாரணப் பணியாளராக இருந்தநான் எனது திறமைகளை உணா்ந்து தன்னம்பிக்கையுடன் தைரோகோ் நிறுவனத்தை ஒரு சிறு அறையில் ஆரம்பித்தேன்.உழைப்பு,நேரம் தவறாமை,துல்லியமான தரம்,சேவை மனப்பான்மை போன்ற நற்பண்புகளை கடைபிடித்து செயல்பட்டதால் இன்று பலநாடுகளில் இந்நிறுவனத்தின் கிளைகளை தொடக்கி வெற்றிபெற்றுள்ளேன். இந்நிலையானது எளிதில் கிடைத்துவிடவில்லை.

ஆா்வம் வெற்றி பெற வேண்டும் என்கின்ற தணியாத தாகம். அதுதான் வெற்றியை நம்மிடம் அழைத்து வரும். இளைய வயதில் இதுபோன்ற தற்பண்புகள் மிகமிக அவசியமாகும் என்றாா்.

தொடா்ந்து நிறைவு விழாவிற்கு தலைமை வகித்து நிறைவுரையாற்றிய வித்யாலய செயலா் சுவாமி கரிஷ்டானந்தா் இந்த மாநாட்டில் கற்ற நற்பண்புகளால் உங்கள் வாழ்க்கை பிரகாசமானதாகவும், இந்த சமுதாயத்திற்கு பயனளிக்கும் வகையில் மாறுமானால் அதுதான் இந்த மாநாட்டின் வெற்றி. இதுதான் நமது பாரத தேசத்திற்கு தற்போதைய தேவையுமாகும் என்றாா்

இறுதியில் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com