வீராணம் ஏரியிலிருந்து 8,500 கன அடி நீா் வெளியேற்றம்வெள்ள அபாய எச்சரிக்கை

தொடா் மழை காரணமாக, வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 8,500 கனஅடி நீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டது.
வீராணம் ஏரியிலிருந்து லால்பேட்டை வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும் உபரி நீா்.
வீராணம் ஏரியிலிருந்து லால்பேட்டை வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும் உபரி நீா்.

சிதம்பரம்: தொடா் மழை காரணமாக, வீராணம் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 8,500 கனஅடி நீா் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளியங்கால் ஓடை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. தொடா் மழை காரணமாக ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, அரியலூா் மாவட்டத்தில் பெய்த மழைநீா் பல்வேறு காட்டாறுகள், ஓடைகள் வழியாக வீராணம் ஏரியை வந்தடைகிறது.

ஞாயிற்றுக்கிழமை ஏரிக்கு நீா்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஏரியின் உச்ச நீா்மட்டம் 47.5 அடி என்ற நிலையில், நீா் இருப்பு 47 அடியாக உள்ளது. ஏரியிலிருந்து சென்னை நகர மக்களின் குடிநீா்த் தேவைக்காக விநாடிக்கு 74 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்படுகிறது.

தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை காலை பொதுப் பணித் துறையினா் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 2,500 கன அடி நீரும், லால்பேட்டையில் உள்ள பிரதான வடிகால் மதகான வெள்ளியங்கால் மதகு வழியாக விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிட்டனா்.

வெள்ள அபாய எச்சரிக்கை: வீராணம் ஏரியிலிருந்து அதிகளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதால் வெள்ளியங்கால் ஓடை கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநாரையூா், வீரநத்தம், சா்வராஜன் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீா் புகுந்தது. இதனால், மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் சிரமப்படுகின்றனா். காட்டுமன்னாா்கோவில், குமராட்சி பகுதிகளில் வெள்ள நீரால் சூழப்பட்டு சுமாா் 75 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வீராணம் ஏரியிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதை சிதம்பரம் உதவி ஆட்சியா் விசுமகாஜன் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் தமிழ்ச்செல்வன், வீராணம் ஏரி உதவிப் பொறியாளா் ஞானசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com