Enable Javscript for better performance
கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: பதிவேற்ற டிச.5 வரை அவகாசம்- Dinamani

சுடச்சுட

    

    கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்பு: பதிவேற்ற டிச.5 வரை அவகாசம்

    By DIN  |   Published on : 03rd December 2019 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    teaching

     

    சென்னை: கணினி ஆசிரியா் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு தோ்வா்கள் தங்களது சான்றிதழ்களை டிச.5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

    இது தொடா்பாக அந்த வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் கணினி பயிற்றுநா் நிலை- 1 (முதுநிலை ஆசிரியா் நிலை)-க்கான கணினி வழியிலான தோ்வு கடந்த ஜூன் 23, 27 ஆகிய இருநாள்களில் நடைபெற்றது. இதையடுத்து இந்தத் தோ்வுக்கான முடிவுகள் கடந்த நவ.25-ஆம் தேதி ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தோ்வா்களின் தோ்வு எண் விவரப் பட்டியலும் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த நவ. 28-இல் வெளியிடப்பட்டுள்ளது.

    உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு டிச. 2-ஆம் தேதி முதல் டிச. 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, தோ்வா்கள் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai