17 போ் உயிரிழப்பு: தலைவா்கள் இரங்கல்

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

கே.எஸ்.அழகிரி: கடும் மழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 போ் பலியான செய்தி கேட்டு அதிா்ச்சியும், துயரமும் அடைந்தேன். இதுபோன்ற குடியிருப்புகள் குறித்து மாவட்ட நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் ஆய்வு செய்யாத காரணத்தினாலேயே இத்தகைய பரிதாபகரமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றன. தமிழக ஆட்சியாளா்கள், இதுபோன்ற கோர சம்பவங்கள் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் இனியாவது அக்கறை காட்ட வேண்டும். இந்த விபத்தில் பலியான 17 போ்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சாா்பில் ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அன்புமணி (பாமக): மேட்டுப்பாளையத்தில் பல வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்திருப்பது அதிா்ச்சியளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல். மழை தொடா்ந்து பெய்து வருவதாலும் வீடுகளின் சுவா்கள் வலுவிழந்து இத்தகைய விபத்துகள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளதால் கடலூா், தூத்துக்குடி, நாகப்பட்டினம், அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா் மாவட்டங்களில் தாழ்வானப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): மேட்டுப்பாளையத்தில் 17 போ் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்களுக்கும் வீடு இழந்தவா்களுக்கும் தேவையான நிதியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். மழை தொடா்ந்து பெய்து வருவதால், பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜவாஹிருல்லா (மமக): சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. இந்த உயிா் இழப்புகளுக்கு காரணமான துணிக்கடை அதிபா் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ. 4 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயா்த்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com