17 போ் உயிரிழப்பு: முழுமையான விசாரணை தேவை

மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், நடூா் ஏடிக்காலனி பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் கருங்கல் சுற்றுச் சுவா் இடிந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 4 குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனா்.

இறந்து போன தலித் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த வசதிபடைத்த பங்களாவின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்து இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே இந்த ஆபத்து குறித்து அரசு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட புகாா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், விபத்திற்கு காரணமான பங்களா உரிமையாளா் மற்றும் கடமை தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com