சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக டி.எஸ். அன்பு நியமனம்
By DIN | Published on : 03rd December 2019 03:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு
சென்னை: சிலைக் கடத்தல் தடுப்புப் பரிவு ஐ.ஜி.யாக டி.எஸ். அன்புவை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை காவல்துறையின் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டி.எஸ். அன்பு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பணிக்காலம் நிறைவு பெற்றதை அடுத்து, புதிய ஐ.ஜி.யாக டி.எஸ். அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய ஐ.ஜி. நியமிக்கப்பட்டுள்ளார்.