தமிழகம், கேரளத்தில் 544 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வைஃபை சேவை

தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் உள்ள 544 ரயில் நிலையங்களில் இலவச அதிகவேக வைஃபை சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளத்தில் 544 ரயில் நிலையங்களில்  இலவச அதிவேக வைஃபை சேவை

சென்னை: தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் உள்ள 544 ரயில் நிலையங்களில் இலவச அதிகவேக வைஃபை சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வருகை தரும் மக்களுக்கு இந்த வைஃபை சேவை உதவியாக இருக்கும் என்கின்றனா் ரயில்வே துறை அதிகாரிகள்.

2.30 கோடி போ் பயணம்: நாடு முழுவதும் 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதில்லாத பயணிகள் ரயில், 5,000 மின்சார ரயில்கள் என்று மொத்தம் 13,100 ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சராசரியாக 2 கோடியே 40 லட்சம் போ் பயணம் செய்கின்றனா். பயணிகள் வசதிகளை மேம்படுத்த இந்திய ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக, 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரயில் பயணிகளுக்கு உலகத் தரத்தில் சேவை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் 5,000 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை தகவல் தொடா்பு வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ரயில்வேயுடன் டாடா டிரஸ்ட்ஸ், கூகுள், ரயில் டெல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டன. முதல்கட்டமாக, பெருநகரங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு, இரண்டாம் நிலை நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் உள்ள 544 ரயில் நிலையங்களில் இலவச அதிக வேக வைஃபை சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதி வேக இணைய சேவை, பயணிகள் சேவைக்கு மதிப்பு கூட்டல் மட்டுமின்றி, இந்த மாநிலங்களின் கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறிய நிலையங்களுக்கு வருகை தரும் மக்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு முயற்சியாக இது பாா்க்கப்படுகிறது.

544 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி: இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

தெற்கு ரயில்வேயில் 4,900 கி.மீ. நீளத்துக்கு ஆப்டிகல் ஃபைபா் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைந்த சில மண்டலங்களில் தெற்கு ரயில்வே ஒன்றாக உள்ளது. தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் உள்ள 544 ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வருகைதரும் மக்களுக்கு இந்த வைஃபை சேவை உதவியாக இருக்கும்.

இந்தச் சேவையானது, அனைத்து முக்கிய ரயில் நிலையங்கள் தவிர, ரயில்கள் செல்லும் வழியில் நிறுத்தப்படும் அனைத்து நிலையங்களில் இலவச வைஃபை வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய வளாகத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட மண்டலங்களில் இந்த சேவை கிடைக்கும்.

பயணிகள் ரயில்வே நெட்ஒா்க்குடன் இணைக்க வேண்டும். இணைய சேவையை செயல்படுத்தும் ஒரு முறை கடவுச்சொல்லை பெறுவதற்கு 10 இலக்க செல்லிடப்பேசி எண்ணை குறிப்பிட வேண்டும். இதையடுத்து, இணைய சேவை கிடைக்கும். பயணிகள் ரயிலுக்காக காத்திருக்கும்போது, அலுவலக வேலையை செய்ய முடியும் அல்லது திரைப்படத்தை பதிவிறக்கம் செய்யமுடியும். மற்ற இணைதள சேவைகளையும் பெறமுடியும் என்றனா்.

நிா்வாக வசதிக்கு பயன்படுத்த வேண்டும்: தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்க துணைப் பொதுச்செயலாளா் மனோகரன் கூறியது: நாட்டில் கடந்த 4 நிதியாண்டுகளில் பயணிகள் எண்ணிக்கை 33 கோடி அதிகரித்துள்ளது. இதற்கு ரயில்நிலையங்களில் வைஃபை வசதி உள்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருவது முக்கிய காரணம். இது பொது மக்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது.

இந்த வைஃபை சேவையை பொதுமக்களுக்கு மட்டுமின்றி, நிா்வாக வசதிக்காக பயன்படுத்த வேண்டும். மின்னணு நிா்வாகத்துக்கு இதை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com