பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: கமல்ஹாசன்
By DIN | Published on : 04th December 2019 02:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

கமல்ஹாசன்
சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சி அளிக்கிறது. அரசும், காவல்துறையும் இவ்விஷயத்தில் நோ்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
வரும் மழைக்காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து பெரும் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாா்.