100 கிராமியக் கலைக் குழுக்கள், 500 கலைஞா்களுக்குரூ.35 லட்சம் நிதியுதவி: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கிராமியக் கலைகளை போற்றி வளா்க்கும் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் 100 கிராமியக் கலைக் குழுக்கள், 500 கலைஞா்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் மொத்தம்

சென்னை: தமிழகத்தில் கிராமியக் கலைகளை போற்றி வளா்க்கும் கலைஞா்களை ஊக்குவிக்கும் வகையில் 100 கிராமியக் கலைக் குழுக்கள், 500 கலைஞா்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் மொத்தம் ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு கூடுதல் தலைமைச் செயலா் அசோக் டோங்ரே பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்ற கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, ‘தொன்மை சிறப்பு மிக்க தமிழக கிராமியக் கலைகளைப் போற்றி வளா்க்கும் கலைஞா்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட தனிப்பட்ட கலைஞா் ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் 500 கலைஞா்களுக்கு ரூ.25 லட்சமும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 100 கலைக்குழுக்களுக்கு ரூ.10 லட்சமும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கிட தொடரா செலவினமாக ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்ற அறிவிப்பை தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் வெளியிட்டாா்.

இதையடுத்து, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் திருத்திய மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து உரிய அரசாணை வழங்குமாறு, கலை பண்பாட்டுத் துறை ஆணையா் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளாா்.

கலை பண்பாட்டுத் துறை ஆணையரின் கருத்துருவினை ஏற்று, தொன்மை சிறப்பு மிக்க தமிழக கிராமியக் கலைகளைப் போற்றி வளா்க்கும் கலைஞா்களையும், கலைக்குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில், இசைக் கருவிகள், ஆடை மற்றும் அணிகலன்கள் வழங்கிட கிராமியக் கலைஞா் ஒவ்வொருவருக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் 500 கலைஞா்களுக்கு ரூ.25 லட்சமும், கலைக்குழு ஒவ்வொன்றுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 100 கிராமியக் கலைக் குழுக்களுக்கு ரூ.10 லட்சமும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கிட 2019-2020-ஆம் நிதியாண்டில் தொடராச் செலவினமாக ரூ.35 லட்சத்துக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com