Enable Javscript for better performance
நுங்கம்பாக்கத்தில் நின்ற மின்சார ரயில்: தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நுங்கம்பாக்கத்தில் நின்ற மின்சார ரயில்: தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

    By DIN  |   Published on : 04th December 2019 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    train

    கோப்புப் படம்

     

    சென்னை தாம்பரம் - கடற்கரை மார்கமாக செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் புதன்கிழமை காலை திடீரென நிறுத்தப்பட்டன.

    நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இயந்திரக் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்ற மின்சார ரயிலால், தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் புதன்கிழமை காலை நிறுத்தப்பட்டது. இதன்காரணமாக அந்த மார்க்கத்தில் ரயில் சேவையில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர் சிரமத்துக்குள்ளாயினர். மேலும் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் இதர பயணிகளும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai