உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக புதிய மனு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக புதிய மனு

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழசனிசாமி திங்கள்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வார்டு மறுவரையறை முழுமையாக முடியும் வரை தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, உள்ளாட்சித் தோ்தலில் வாா்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்டவற்றில் முறையான சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்கள் மீதான வழக்குகளின் விசாரணையும் டிசம்பர் 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com