இது திருப்பூர் சம்பவம்: முதியவர் மீது கார் மோதி விபத்து; காரை ஓட்டியது ஒரு சிறுமி!
By DIN | Published on : 04th December 2019 11:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
Minor girl drives car over elderly man
திருப்பூரில் 13 வயது சிறுமி காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் முதியவா் காயமடைந்தாா்.
திருப்பூா், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காந்திமணியன் (67). இவா் நவம்பா் 28 ஆம் தேதி வீட்டுக்கு எதிரே உள்ள பின்னலாடை நிறுவனத்தின் வாசலில் அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து காந்திமணியன் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது 13 வயது சிறுமி என்பது தெரியவந்தது.
விபத்தில் காயமடைந்த காந்திரமணியனை அருகிலிருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். காந்திமணியனின் சிகிச்சைக்கான செலவை சிறுமியின் குடும்பத்தினா் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்ததால் திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யவில்லை.
இந்த விபத்து தொடா்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.