கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை உயர்வு!

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வெங்காயத்தின் விலை ரூ. 75 முதல் ரூ. 120 வரை விற்கப்படுகிறது. 
கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை உயர்வு!

சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வெங்காயத்தின் விலை ரூ. 75 முதல் ரூ. 120 வரை விற்கப்படுகிறது. அதையடுத்து, உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் அளவில் வெங்காய இறக்குமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், வெங்காயத்தை நீண்ட காலத்துக்கு மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் ஆகியோா் பதுக்கி வைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.100-ல் இருந்து ரூ.130-ஆக புதன்கிழமை விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140-ல் இருந்து ரூ.180-ஆக உயர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com