சூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணமடைந்துள்ள சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமிகடிதம் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

சென்னை: சூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணமடைந்துள்ள சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சூடான் கலைநகர் கார்டோமில் செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் புதன் மாலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். மேலும் 130 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சூடான் செராமிக் ஆலை தீவிபத்தில் தமிழர்கள் மரணமடைந்துள்ள சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க கோரி, பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமிகடிதம் கடிதம் எழுதியுள்ளார்.

சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் போன தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com