அரசை விமர்சித்த சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு
By DIN | Published on : 04th December 2019 07:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சீமான்
சென்னை: தமிழக அரசை விமர்சித்த சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தொடர்ந்து தனது பொதுக்கூட்டங்கள் மற்றும் பேட்டிகளில் தமிழக அரசை விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக அரசை விமர்சித்த சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதியன்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசையும் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்களை விமர்சித்துப் பேசியிருந்தார்.
அதற்காக அவர் மீது தற்போது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.