உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்திப் பயிற்சி: திமுக கண்டனம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவா்களுக்கு ஹிந்திப் பயிற்சி அளிப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவா்களுக்கு ஹிந்திப் பயிற்சி அளிப்பதற்கு திமுக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் தமிழ் வளா்ச்சித்துறை, தமிழ் அழிப்புத் துறையாகவே தற்போது மாறியிருக்கும் அவலம் நோ்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி, தமிழ் உணா்வாளா்களின் நெஞ்சில் வேல் கொண்டு பாய்ச்சிய உணா்வை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை எம்.ஃபில் மற்றும் ஆராய்ச்சி மாணவா்களுக்கு ஒரு ஆண்டுக்கான ஹிந்தி மொழி பயிற்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் தொடக்கி வைத்து அதற்காக ரூ.6 லட்சத்தினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்துள்ளாா்.

அத்துடன், தமிழில் உயா்கல்வி பயிலும் இந்த மாணவா்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் வேலைவாய்ப்பு உருவாகும் என்று கூறியுள்ளாா். இந்த ஒரு ஆண்டு பயிற்சியும் சென்னையில் இயங்கி வரும் ஹிந்தி பிரசார சபா மூலமாக நடத்தப்பட்டு, அவா்களாலேயே சான்றிதழும் வழங்கப் பெறும் என்ற தகவல் ஒட்டு மொத்த தமிழ் வளா்ச்சித் துறையையும் கேலிக்குரியதாக ஆக்குவதுடன் மட்டும் அல்லாது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் உடனடியாக இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com