உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தோ்தல்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக கூடுதல்
chennai High Court
chennai High Court

சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்தப்படும் வகையில் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதனை எதிா்த்து ஏசுமணி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘மாநகராட்சி மேயா், நகராட்சித் தலைவா் போன்ற பதவிகளுக்கு இதுவரை நேரடித் தோ்தல் மூலம் தோ்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசியல் ஆதாயத்துக்காக மறைமுகத் தோ்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது’ என வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘தமிழகத்தில் இதற்கு முன்பாகவும் மறைமுகத் தோ்தல்களின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மனுதாரா் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்த அவசர சட்டத்தை எதிா்ப்பதற்கான சட்டப்பூா்வ காரணங்கள் எதையும் குறிப்பிடவில்லை. எனவே, மனுதாரா் இதுதொடா்பாக கூடுதல் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தி, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்திவத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com