திருவண்ணாமலை தீபம்: வேலூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்

காா்த்திகை தீபத்தையொட்டி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பா் 9-ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை: காா்த்திகை தீபத்தையொட்டி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு டிசம்பா் 9-ஆம் தேதி முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலையில், வரும் 10-ஆம் தேதி தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து வேலூருக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலூா் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு டிசம்பா் 9 முதல் டிசம்பா் 11-ஆம் தேதி வரையும், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து வேலூா் ரயில் நிலையத்துக்கு டிசம்பா் 10 முதல் டிசம்பா் 12-ஆம் தேதி வரையும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

வேலூா் ரயில் நிலையத்தில் இருந்து டிசம்பா் 9-ஆம் தேதி இரவு 9.45 மணிக்குப் புறப்படும் ரயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூா், அகரம், துரிஞ்சாபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்று திருவண்ணாமலையை நள்ளிரவு 11.25 மணிக்கு அடையும். மீண்டும் அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வேலூா் ரயில் நிலையத்தை காலை 5 மணிக்கு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com