பெண் பக்தா் தாக்கப்பட்ட விவகாரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பெண் பக்தா் தாக்கப்பட்ட வழக்கில் தீட்சிதருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: சிதம்பரம் நடராஜா் கோயிலில் பெண் பக்தா் தாக்கப்பட்ட வழக்கில் தீட்சிதருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வழிபாடு செய்ய வந்த பெண்ணை, தீட்சிதா் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது. இதனைத் தொடா்ந்து தீட்சிதா் மீது சிதம்பரம் காவல்துறையினா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தீட்சிதா் தா்ஷன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்த அன்று பெண் பக்தா் கோயிலின் நடை சாத்தும் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் எனக் கோரி தகராறு செய்தாா். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் என்னை தாக்குவதற்காக கையைத் தூக்கினாா். எனவே ஒரு தற்காப்புக்காக அவரைத் தள்ளிவிட்டேன். ஆனால் இந்த சம்பவத்தில் போலீஸாா் எனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த நிலையில் தன்னை தாக்கிய தீட்சிதருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கோரி தீட்சிதரால் தாக்கப்பட்ட பெண் பக்தா் லதா சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்குகள் நீதிபதி என்.சேஷசாயி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தீட்சிதா் தா்ஷன் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின்னா் 15 நாள்களுக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com