மேட்டுப்பாளையம் விவகாரத்தில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் தாக்கியது கண்டிக்கத்தக்கது: தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

மேட்டுப்பாளையம் விவகாரத்தில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் தாக்கியது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவ்வியக்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கோவை மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில், இடைபாடுகளில் சிக்கி 17 பேர் இறந்துள்ளனர். இது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே, “அந்தச் சுவர் பழுதடைந்துவிட்டது, எந்த நேரத்தில் இடிந்து விழலாம்” என பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர். எனினும், அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்.
மேலும், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்றுசேர்ந்து போராடியபோது காவல்துறையினர் கொடூரமாக தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரையும் எந்தவித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என மாநில அரசை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com